Daily Updates

இலக்கியம் - இனியவை நாற்பது தொடர்பான செய்திகள்
  • 2016-10-19
இலக்கியம் - இனியவை நாற்பது தொடர்பான செய்திகள்

1. உலகில் நல்ல அல்லது இனிமையான விஷயங்களை எடுத்துக்கூறுவதன் மூலம் மக்களுக்கு நீதி புகட்டுவதே --------------- நூலின் நோக்கம் ஆகும் - இனியவை நாற்பது

2. இனியவை நாற்பது என்ற நூலில் உள்ள ஒவ்வொரு பாடலும் ------------- நல்ல விஷயங்களை எடுத்துக் கூறுகின்றது - மூன்று

3. இனியவை நாற்பது பண்டைக்காலத் தமிழ்நூல் தொகுப்புக்களில் ஒன்றான ---------------- நூல்களுள் ஒன்றாகும் - - பதினெண்கீழ்க்கணக்கு

4. இனியவை நாற்பது என்ற நூலில் உள்ள வெண்பாக்களின் எண்ணிக்கை ------------ - நாற்பது

5. சுற்றியிருப்பவர்களுக்குக் ----------- கற்பித்தல் மிகவும் நல்லது என்ற கருத்தைக் கூறும் நூல் எது? - கல்வி, இனியவை நாற்பது

6. பூதஞ்சேந்தனார் --------------- நோக்குடையவராயிருந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது - சர்வ சமய

7. பூதஞ்சேந்தனார் மதுரையில் உயர்ந்த தமிழாசிரியராக விளங்கியதால் -------------- என்ற சிறப்புப் பெயர் பெற்றார் - மதுரைத் தமிழாசிரியர்

8. குழவி பிணி இன்றி வாழ்தல் இனிதே என்ற பாடல் வரி அமைந்துள்ள நூல் எது? - இனியவை நாற்பது

9. ஆற்றுந் துணையால் அறஞ்செய்கை முன்னினிதே என்று கூறியவர்? - பூதஞ்சேந்தனார்

10. சிறிய அளவிலாயினும் தேவைப்படுபவர்களுக்குக் கேட்காமலேயே கொடுப்பது எப்பொழுதுமே நல்லது என்று எடுத்துரைக்கும் நூல் ----------- - இனியவை நாற்பது

...