Daily Updates

புவியியல் - வானிலை மேப்பு
  • 2016-10-18
புவியியல் - வானிலை மேப்பு

1. நிர்வாக வசதிக்காகவும் தொழில் நுணுக்க கட்டுப்பாட்டிற்காகவும் எத்தனை வட்டார வானிலை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன - ஆறு

2. வட்டார வானிலை மையங்கள் எங்கெங்கு நிறுவப்பட்டுள்ளன - கொல்கொத்தா, சென்னை, கௌஹாத்தி, மும்பாய், நாக்பூர், நியூடெல்லி

3. வட்டார வானிலை மையம் சென்னையில் எப்பொழுது அமைக்கப்பட்டது - ஏப்ரல் மாதம் 1945-ஆம் ஆண்டு

4. சென்னை வட்டார வானிலை மையம் எந்தெந்த மாநிலங்களை உள்ளடக்கியது - தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம், கர்நாடகா, கேரளா

5. வானிலை மையங்கள் நாளொன்றுக்கு எத்தனை முறை வளிமண்டல நிலைகளைப் பற்றி அறிவிக்கின்றன - நான்கு

6. ............. நேரப்படி வானிலை மையங்கள் வளிமண்டல நிலைகளை அறிவிக்கின்றன - கிரீன்வீச்

7. வானிலை மையங்கள் எந்தெந்த நேரங்களில் வளிமண்டல நிலைகளை அறிவிக்கின்றன - 0, 6, 12, 18 ( கிரீன் வீச் நேரப்படி )

8. மனிதர்கள் வாழ்கின்ற புவிப்பரப்பினைப் பற்றி கற்றறிவதே ........... முக்கிய நோக்கமாகும் - புவியியலின்

9. புவிபரப்பில் ............ இனமும் ............. தோற்றங்களும் முக்கிய கூறுகளாக அமைகின்றன - மனித இனமும், இயற்கை தோற்றங்களும்

10. நிலம், அதன் தோற்றம், வானிலை, காலநிலை, கடல் மற்றும் அதன் பண்பு நலன்கள் ஆகியவற்றில் ஏற்படுகின்ற மாற்றங்களை .......... புவியியலாகக் கற்றறிகின்றோம் - இயற்புப் புவியியல்

...