Daily Updates

மகதத்தின் எழுச்சியும், அலெக்சாந்தரின் படையெடுப்பும் FOR TNPSC GROUP 4
  • 2016-11-03
 மகதத்தின் எழுச்சியும், அலெக்சாந்தரின் படையெடுப்பும் FOR TNPSC GROUP 4

1. வடமேற்கு இந்தியாவிலும், இமயமலைகளின் அடிவாரத்திலும் ........... ஆட்சிகள் இருந்தன - குடியாட்சிகள்

2. ............, ............., ............. போன்ற ஒரே குலத்தைச் சேர்ந்த குடியாட்சிகளும் காணப்பட்டன - சாக்கியர்கள், லிச்சாவிகள், மல்லர்கள்

3. பதினாறு அரசுகள் பற்றி .............. நூல்களும் குறிப்பிடுகின்றன - சமண

4. கி.மு. ஆறாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் எத்தனை அரசுகள் மட்டுமே எஞ்சியிருந்தன - நான்கு

5. கி.மு. ஆறாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் எஞ்சியிருந்த நான்கு அரசுகள் யாவை - வத்சம், அவந்தி, கோசலம், மகதம்

6. எந்த அரசு யமுனை நதிக்கரையில் அமைந்திருந்தது - வத்சம்

7. வத்சம் அரசின் தலைநகரம் எது - அலகாபாத்துக்கு அருகிலுள்ள கோசாம்பி

8. வத்சம் அரசின் புகழ்மிக்க அரசர் யார் - உதயணன்

9. உதயணன் மறைவுக்கு பின்னர் வத்சம் அரசு எந்த அரசுடன் இணைக்கப்பட்டது - அவந்தி

10. அவந்தி அரசின் தலைநகரம் எது - உஜ்ஜயினி

11. அவந்தி அரசின் மிகச் சிறப்பு வாய்ந்த அரசர் யார் - பிரயோதித்யன்

...